செய்திகள்

கார்த்தியின் 'சர்தார்' - வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தியின் சர்தார் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வசூல் சாதனை படைத்துவரும் நிலையில் அடுத்ததாக கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார். சர்தார் படத்தை விஷாலின் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். 

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT