செய்திகள்

விஜய் சேதுபதி - வடிவேலு இணையும் படம் - இயக்குநர் யார் தெரியுமா ?

விஜய் சேதுபதி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

மாஸ்டர், கடைசி விவசாயி, விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள தற்போது ஹிந்தியிலும் கால்பதித்துள்ளார். 

ஹிந்தியில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து 'மெரி கிரிஸ்துமஸ்',  'மாநகரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'மும்பைகர்' போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் உச்சகட்டமாக அட்லி இயக்கிவரும் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களின் பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்குகிறார். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக வடிவேலு கைகோர்க்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT