முகப்பு
செய்திகள்

சமீபத்தில் வெளியான படத்தை விமர்சித்த நடிகர் தனுஷ்

சமீபத்தில் வெளியான படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். 

Updated On : 14 அக்டோபர், 2022 at 12:27 PM
பகிர்:

சமீபத்தில் வெளியான படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். 

ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்துள்ள கன்னடத் திரைப்படமான காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களப் பெற்றுவருகிறது. பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். 

இதனையடுத்து இந்தப் படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு பதிப்புகள் விரைவில் வெளியாகின்றன. தமிழில் இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ் பதிப்பின் டிரெய்லரை நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்டார். 

Advertisement

இந்த நிலையில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''காந்தாரா என்ன ஒரு படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ரிஷப் ஷெட்டி உங்களை நினைத்து நீங்களே பெருமைப்பட வேண்டும். ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.