செய்திகள்

ஹிந்தி படத்தில் பாடிய சிம்பு - வெளியான பாடல் இதோ

சிம்பு முதன்முறையாக ஹிந்தியில் பாடிய பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

DIN

சிம்பு முதன்முறையாக ஹிந்தியில் பாடிய பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

மங்காத்தா, சென்னை 28 2 போன்ற படங்களில் நடித்த மகத் ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள படம் டபுள் எக்ஸ்எல். இந்தப் படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

 சத்ரம் ரமணி இயக்கியுள்ளார்.  இதன் ஒரு பகுதியாக இப்படத்துக்காக நடிகர் சிம்பு பாடிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவும் மகத்தும் நண்பர்கள் என்பதால் நட்புக்காக அவர் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

இதற்காக நடிகர் மகத் சிம்புவுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், எனக்கு எப்பவும் முன்னோடியாக, வழிகாட்டியாக நல்ல நண்பனாக இருந்திருக்கிறாய். என் இலக்கை அடைவதற்கு உதவிய உனக்கு நன்றி. லவ் யூ மச்சா என்று குறிப்பிட்டுள்ளார். டபுள் எக்ஸ்எல் திரைப்படம் வருகிற 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT