முகப்பு
செய்திகள்

கார்த்தியின் 'சர்தார்' மற்றும் ஷாருக்கானின் 'ஜவான்' ஒரே கதையா ? பதிலடி கொடுத்த படத்தொகுப்பாளர்

கார்த்தியின் சர்தார் மற்றும் ஷாருக்கானின் ஜவானும் ஒரே கதை என பரவும் தகவலுக்கு பிரபல படத்தொகுப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

கார்த்தியின் சர்தார் மற்றும் ஷாருக்கானின் ஜவானும் ஒரே கதை என பரவும் தகவலுக்கு பிரபல படத்தொகுப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். 

கார்த்தியின் சர்தார் திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் சர்தார் படத்தை எழுத இயக்கியுள்ளார். சர்தார் டிரெய்லர் நேற்று (அக்டோபர் 14) ஆம் தேதி வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

இந்தப் படம் தொடர்பாக ட்விட்டரில் சினிமா பதிவர் ஒருவர், கார்த்தியின் சர்தார் மற்றும் அட்லியின் ஜவான் ஆகிய இரண்டும் ஒன்றுதான். இரண்டு படங்களுக்கும் ஒரே கதை தான் என்று பதிவிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து சர்தார் படத்தொகுபபாளர் ரூபன் அவருக்கு பதிலளித்துள்ளார். அதில், என்னுடைய கடவுளே எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? உங்களின் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது சகோ, இஸ்டத்துக்கு... எனப்பதிவிட்டுள்ளார். 

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யூடியூப் பிரபலமான சிறுவன் ரித்விக் சர்தாரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டிரெய்லரில் ரித்விக்கின் காட்சிகள் அட்டகாசமாக இருக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →