செய்திகள்

லுங்கியுடன் குத்து டான்ஸ் போட்ட கீர்த்தி சுரேஷ்! (விடியோ) 

தசரா படத்தில் வரும் ‘தூம்தாம்’ பாடலுக்கு லுங்கியுடன் குத்து டான்ஸ் போட்ட கீர்த்தி சுரேஷின் வைரலாகும் விடியோ...

DIN

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்துவருகிறார். 

கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானியின் தசரா படத்தில் வரும் ‘தூம்தாம்’ பாடலுக்கு தோழியுடன் நடனாமாடியுள்ள விடியோவை பகிர்ந்துள்ளார். இதில் லுங்கி கட்டிக் கொண்டு நடனமாடும் இந்த விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை: சென்சார் பதிந்த கால்பந்து அறிமுகம்!

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய பாஜக கவுன்சிலர் மனு நிராகரிப்பு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

SCROLL FOR NEXT