பொங்கலுக்கு 'துணிவு' வெளியாவது உறுதி
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் துணிவு படத்தின் வெளியீட்டை பிரபல திரையரங்க உரிமையாளர் உறுதிசெய்திருக்கிறார்.
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் துணிவு படத்தின் வெளியீட்டை பிரபல திரையரங்க உரிமையாளர் உறுதிசெய்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித் குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். உண்மையான திருவிழா மனநிலையை ரசிகர்களிடம் காணமுடிந்தது.
இதையும் படிக்க | சத்யாவின் மரணத்துக்குப் பிறகாவது திருந்துமா தமிழ் சினிமா ?
Advertisement
ஏற்கனவே துணிவு வெளியாவதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் உறுதிசெய்த நிலையில், சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் நிக்கிலேஷ் சூர்யாவும் துணிவு ஜனவரி 12, 2023 வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
துணிவு படம் 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.