செய்திகள்

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படம்

DIN

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜமௌலி இயக்கிய முதல் படமான 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் முதல் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக்காகியிருக்கின்றன. 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் தமிழில் அதே பெயரில் சிபி சத்யராஜ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. 

அவரது 'சிம்ஹாத்திரி' திரைப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் 'கஜேந்திரா' என்ற பெயரிலும், அவரது 'சத்ரபதி' திரைப்படம் தமிழில் குருவி என்ற பெயரிலும், விக்ரமார்குடு சிறுத்தை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றன. 'விக்ரமார்குடு' திரைப்படம் ஹிந்தியில் 'ரௌடி ரத்தோர்' என்ற பெயரிலும் ரீமேக்காகியிருக்கிறது. 

இப்படி தனது படங்களை இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களும் ரசிக்கும்படியாக கொடுத்துவந்திருக்கிறார்.  அவரது படங்களின் வெற்றிக்கு அவர்தான் காரணம் என்பதை திரையுலகினருக்கு அழுத்தமாக பதிய வைக்க நகைச்சுவை நடிகரான சுனிலை 'மரியாதை ராமண்ணா' என்ற படத்தில் ஹீரோவாக்கி வெற்றிபெற்றார். அந்தப் படம்தான் சந்தானம் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் வெளியானது. 

அது மட்டுமல்லாமல் ஈயை ஹீரோவாக வைத்து நான் ஈ என்ற பெயரில்  வெற்றிபெற்றார் ராஜமௌலி. எனது படங்களின் வெற்றிக்கு நாயகர்கள் தேவையில்லை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்தார். மேலும் மிகப் பெரிய பொருட் செலவில் ஃபேண்டஸி படமான மகதீரா படத்தை எடுத்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். 

இவையெல்லாம் ரூ.500 கோடி பொருட் செலவில் அவரது கனவுப்படமான பாகுபலி படத்தை உருவாக்குவதற்கு முன்னோட்டமாக அமைந்தன. தயாரிப்பாளர்கள் அவர் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கு காரணங்களாக அமைந்தன.

அவரது பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர்  படங்களை உலகமே கொண்டாடியதை நாம் அறிவோம். அந்த வரிசையில் மகேஷ் பாபுவுடன் இணையும் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இந்தப் படம் அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி - மகேஷ் பாபு படம் உருவாகவுள்ளதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT