இயக்குநர் ராஜமௌலி படத்தில் இணையும் பிரபல நடிகை
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமௌலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் ‘பத்து தல’ படப்பிடிப்பு
இந்தப் படம் அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் கூறப்பட்டது.பின்னர், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி - மகேஷ் பாபு படம் உருவாகவுள்ளதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.