செய்திகள்

சூர்யாவின் 'சூரரைப் போற்று', 'ஜெய் பீ்ம்' படங்களுக்கு தேசிய அளவில் கிடைத்த கௌரவம்

சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களுக்கு தேசிய அளவில் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

DIN

தொடர் தோல்விகளில் இருந்த நடிகர் சூர்யாவுக்கு 2020ல் சூரரைப் போற்று, 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் கிடைத்தன. இதனை நடிகர் சூர்யாவும் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பகிர்ந்து, இயக்குநர் சுதா கொங்கராவுக்கு நன்றி தெரிவிக்க, அதனைக் கேட்ட சுதா கண் கலங்கினார். 

சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை வென்றது. அடுத்த ஆண்டு ஜெய் பீம் திரைப்படமும் தேசிய விருதுகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அதிக ரேட்டிங் பெற்ற 250 இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் 20 இடத்திற்குள் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது. இந்த இரண்டு படங்களும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

SCROLL FOR NEXT