செய்திகள்

''மதம், கோவில், சாமியார் எல்லோரையும்.... '' - விஜய் ஆண்டனி அதிரடி

கடவுள் முன் வந்தால் என்ன கேட்பீர்கள் என விஜய் ஆண்டனி ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

கடவுள் முன் வந்தால் என்ன கேட்பீர்கள் என விஜய் ஆண்டனி ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி சமீப காலமாக ட்விட்டரில் அதிகம் பதிவிட்டுவருகிறார். குறிப்பாக சமூக நிகழ்வுகளுக்கு தன் குரலைப் பதிவு செய்துவருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து பதிவிட்ட அவர், குற்றவாளி சதீஷை ரயில் முன் தள்ளிவிட்டு கொள்ளவேண்டும் என பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடவுள் என் முன்னாடி, வந்தா, சாதி, மதம், கோவில், சாமியார் எல்லோரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை, கொள்ளையை ஒழித்துவிட்டு பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்னு கோரிக்கை வைப்பேன். நீங்க என்ன கேட்பீங்க?'' என  ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு கோடியில் ஒருவன் என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வள்ளிமயில் போன்ற பல பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. 

இதில் ரத்தம் படத்தை 'தமிழ் படம்' பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு, முதன்முறையாக இயக்குநராகவும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

SCROLL FOR NEXT