செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்துக்காக பிரபல ஹீரோவிடம் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்துக்காக பிரபல ஹீரோவிடம் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இயக்கிய ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்கவிருந்தார். 

திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸிற்கு பதிலாக நெல்சன் திலீப்குமார் விஜய்யை பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனாலும் நெல்சன் இயக்கிய படமும் ரசிகர்களைக் கவரவில்லை. 

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்தப் படத்துக்காக சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். விஜய்க்காக அவர் எழுதிய கதையை தற்போது சிம்புவுக்கு ஏற்றார் போல மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் இயக்குநர் சுதா கொங்கராவும் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம். சிம்பு என்ன முடிவெடுக்கப்போகிறார் என திரையுலகினர் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT