செய்திகள்

'விக்ரம்' பட சூர்யா போல, சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' கிளைமேக்ஸில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்

விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக சூர்யா தோன்றியது போல சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட கிளைமேக்ஸில் பிரபல நடிகர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக சூர்யா தோன்றியது போல சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட கிளைமேக்ஸில் பிரபல நடிகர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் நாளை (அக்டோபர் 21) தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதிரத்னாலு படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். 

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூரி கிளைமேக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். 

சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி பல படங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. அந்த வரிசையில் பிரின்ஸ் பட கிளைமேக்ஸ் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

SCROLL FOR NEXT