முகப்பு
செய்திகள்

'வீரம்' பட ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காயம்

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகை பூஜா ஹெக்டே காயம் அடைந்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகை பூஜா ஹெக்டே காயம் அடைந்துள்ளார். 

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படத்தின் தோல்வியினால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

பின்னர் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துவந்த பூஜா ஹெக்டேவுக்கு தெலுங்கில் வெற்றிபெற்ற அல வைக்குந்தபுரமுலோ திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா உள்ளிட்ட பாடல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. 

இதன் காரணமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அந்த வகையில் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். 

தற்போது அஜித்தின் 'வீரம்' ஹிந்தி ரீமேக்கான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பூஜா ஹெக்டேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.