முகப்பு
செய்திகள்

மீண்டும் திரைப்படம் இயக்கவிருக்கும் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி, ஷங்கர் - ராம் சரண் படம் ஆகிய இரண்டு படங்களில் வில்லனாக நடித்துவருகிறார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு என இவர் வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இதன் காரணமாக இவருக்கு வில்லன் வேடமே தொடர்ச்சியாக கிடைப்பதாக கூறப்படுகின்றன. இடையில் அவர் ஹீரோவாக நடித்த மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடித்துவரும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் திரைப்படம் இயக்கவிருக்கிறார். கில்லர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு துவங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என இவர் இயக்கிய படங்கள் எல்லாம் பெரும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →