செய்திகள்

தீபாவளி பரிசு! தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வாத்தி தயாிப்பாளர்

தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் தொடர்பாக புதிய தகவலை தயாரிப்பாளர் நாக வம்சி பகிர்ந்துள்ளார். 

DIN

தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் தொடர்பாக புதிய தகவலை தயாரிப்பாளர் நாக வம்சி பகிர்ந்துள்ளார். 

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி டத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பணிகள் முடிவடையாததால் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்திலிருந்து தீபாவளியை முன்னிட்டு நாளை(அக்டோபர் 24) காலை 9 மணிக்கு புதிய போஸ்டர் வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி அறிவித்துள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT