செய்திகள்

அஜித்தின் துணிவு: துவங்கியது டப்பிங் பணிகள்

 நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது. 

DIN

 நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது. 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. 

ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. 

தற்போது இப்டத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணிவு திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் பரபரப்பாக இயங்கிவருகின்றனர். 

மற்றொருபுறம் பிரபாஸின் ஆதிபுருஷ் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தெலுங்கில் வாரிசு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் தயாரிப்பாளர் தில் ராஜு இந்த முடிவெடுத்துள்ளாராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

SCROLL FOR NEXT