செய்திகள்

பிக்பாஸில் ஆயிஷாவைப் பாராட்டிய கமல்

பிக்பாஸில் ஆயிஷா மற்றும் விக்ரமனை கமல்ஹாசன் பாராட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

DIN

பிக்பாஸில் ஆயிஷா மற்றும் விக்ரமனை கமல்ஹாசன் பாராட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் 6 துவக்கம் முதலே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கமலின் அறிவுரையின் பேரில் போட்டியாளர்கள் கன்டென்ட் தர துவங்கிவிட்டார்கள். 

அசல் பெண்களிடம் நடந்துகொள்ளும் முறை தவறாக இருப்பதாக சமூக வலைதளங்களில் சில விடியோக்கள் பகிரப்பட்டுவருகின்றன. சமீபத்தில் அசீம், ஆயிஷாவை வாடி, போடி எனப் பேச அதற்கு ஆயிஷா மரியாதையாக பேசுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அசீம் அவ்வாறாகவே பேச ஆயிஷா செருப்பை கழட்ட பிரச்னை பெரிதானது. 

இந்த விவகாரம் குறித்து நடிகர் கமல் விவாதிப்பார் என்று கூறப்பட்டது. அதன் படி நேற்றைய தினம் கமல் ஆயிஷாவிடம், ''நீங்கள் என்ன மரியாதையை எதிர்பார்த்தீர்களோ, அதே மரியாதையை அவருக்கு கொடுத்தீர்கள்'' என பாராட்டி பேசினார். 

மேலும், ''விக்ரம் பத்திரிகையாளர், அவருக்கு எப்படி ஒருவரைக் கோபப்படுத்தாமல் கேள்வி கேட்பது என தெரியும். ஆனால் ஆயிஷா இந்த வயதில் தெளிவாக இருப்பது பாராட்டுக்குரியது'' என்று பாராட்டி பேசியுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT