செய்திகள்

இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். 

DIN

போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். 

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

இதனிடையே தீபாவளி நாளில் ரஜினியை காண அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு கூடினர். இதனை அறிந்த ரஜினி தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபவாளி வாழ்த்து தெரிவித்தார். 

அத்துடன் ரசிகர்களுக்கு ரஜினி தரப்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT