செய்திகள்

ரசிகர்களுக்கு விடியோ மூலம் தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா - ஜோதிகா

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளனர். 

DIN

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளனர். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெறும்போது ஜோதிகா தன் போனில் ஃபோட்டோ எடுத்தார். 

அதே போல சிறந்த படத்துக்கான தேசிய விருதை தயாரிப்பாளராக ஜோதிகா விருதைப் பெற்றார். அப்போது சூர்யா தன் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தார். இதனையடுத்து இருவரும் கணவன் - மனைவிக்கு உதாரணமாக விளங்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் இருவரும் இணைந்து வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துசொல்லியுள்ளனர். இதனை நடிகர் சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

சூர்யா தற்போது சிவா இயக்கும் படத்திலும், ஜோதிகா மம்மூட்டியுடன் இணைந்து காதல் படத்திலும் நடித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் திரளான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

SCROLL FOR NEXT