முகப்பு
செய்திகள்

பொங்கலுக்கு ரிலீஸாகும் 'துணிவு' - உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள அஜித்தின் துணிவு படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள அஜித்தின் துணிவு படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. 

துணிவு படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் மிகப்பெரிய படங்களை வெளியிட்டு வசூலை குவித்து வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம்! 

முழு கட்டுரையைப் படிக்க →