2023 பொங்கல் பண்டிகையின்போது விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் ஒரே சமயத்தில் வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் - துணிவு. இசை - ஜிப்ரான். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். வீரா, அஜய், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் போன்றோரும் நடிக்கிறார்கள். துணிவு படமும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
2014 பொங்கல் பண்டிகையின்போது விஜய் நடித்த ஜில்லாவும் அஜித் நடித்த வீரமும் ஒரே சமயத்தில் வெளியாகின. அதற்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து இப்போதுதான் இருவருடைய படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளன. கடந்த முறை ஜில்லாவை விடவும் வீரம் படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்தமுறை எந்தப் படம் ரசிகர்களைக் கவரும், அதிக வசூலைப் பெறும் என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.