செய்திகள்

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி! (படங்கள்)

ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால் நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினி சார்.

DIN

கேஜிஎஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் அடுத்ததாகத் தயாரித்து வெளியிட்ட காந்தாரா என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்று அதிக வசூலைப் பெற்றுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

சமீபத்தில் காந்தாரா படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டார் ரஜினிகாந்த். தெரிந்ததை விடவும் தெரியாதது தான் அதிகம் என்பதை காந்தாரா படத்தை விடவும் வேறு யாரும் தெளிவாகச் சொல்லி விட முடியாது. எனக்குப் புல்லரித்தது ரிஷப் ஷெட்டி. கதை எழுதி, நடித்து இயக்கிய உங்களுக்குப் பாராட்டுகள். இந்தியத் திரையுலகின் மகத்தான படத்தை அளித்த படக்குழுவினருக்குப் பாராட்டுகள் என்றார். 

இந்நிலையில் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரிஷப் ஷெட்டி. இதுபற்றி ட்விட்டரில் ரிஷப் ஷெட்டி கூறியதாவது: ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால் நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினி சார். எங்களுடைய காந்தாரா படத்தைப் பாராட்டியதற்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT