செய்திகள்

நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்!

தனது பிறந்தநாளன்று நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ். 

DIN

கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குகிறார். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.  மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இனிமேல் நானே அறக்கட்டளைக்கு தேவையான பணத்தினை பார்த்துக் கொள்கிறேன். யாரும் அன்பளிப்பு அளிக்க வேண்டாம் என சமீபத்தில் லாரன்ஸ்  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது 46வது பிறந்த நாளன்று நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் கூறியதாவது: 

என்னுடைய பிறந்த நாளில் தலைவர் மற்றும் குருவாகிய ரஜினி சாரிடம் வாழ்த்து பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் எதாவது சேவை செய்வேன். இந்தாண்டு அன்னதானம் செய்யவிருக்கிறேன். பசியின் முக்கியத்துவம் அறிந்ததால் இதை செய்கிறேன். நானே நேரடியாக சென்று என்னால் முடிந்தவரை உணவளிக்க இருக்கிறேன். எனக்கு உங்களது ஆசிர்வாதம் தேவை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT