செய்திகள்

வாரிசு படத்தின் இசை உரிமத்தை கைப்பற்றியது யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை உரிமத்தை டி சீரிஸ் மியூசிக் கைப்பற்றியுள்ளது. 

DIN

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை உரிமத்தை டி சீரிஸ் மியூசிக் கைப்பற்றியுள்ளது. 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமம் ஆகியவை ரூ.180 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் முதல் பாடலுக்கு ரசிகர்கள் தீபாவளியன்று வெளியாகுமென மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், பாடலுக்கு பதிலாக புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை உரிமத்தை டி சீரிஷ் மியூசிக் கைப்பற்றியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT