செய்திகள்

24-ம் புலிகேசியாக நடிகர் யோகிபாபு?

சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு சரித்திரம் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளார். 

DIN


சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு சரித்திரம் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளார். 

போட்டிக்கு யாரும் இல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. மேலும் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துவருகிறார். 

அந்த வகையில் அவர் நடித்த மண்டேலா திரைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்துள்ள யோகி பாபு தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். 

2006இல் வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை மீண்டும் வடிவேலு வைத்து எடுக்கப்பட்ட போது கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது சிம்பு தேவன் யோகி பாபு வைத்து சரித்திரம் கதையம்சம் கொண்ட நகைச்சுவைப் படத்தில் நடிக்க உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

SCROLL FOR NEXT