பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லியிருக்கும் நடிகர் விஷால் 
செய்திகள்

பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லியிருக்கும் நடிகர் விஷால்

வாராணசியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை மேம்படுத்தியதற்காக, நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

PTI


சென்னை: வாராணசியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை மேம்படுத்தியதற்காக, நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தற்போது குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த ஆன்மிகப் பயணத்தில் அவர் காசிக்கும் சென்றுள்ளார். 

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தனது புகைப்படம் மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கூறியிருப்பதாவது, அன்புக்குரிய மோடி அவர்களே, நான் காசிக்குச் சென்று வந்தேன். மிகச் சிறந்த தரிசனம் / பூஜை கிடைத்தது. மிகப் புனிதமான கங்கை ஆற்றையும் தொடும் பாக்கியம் கிடைத்தது.

காசி கோயிலை மேம்படுத்தியதற்காக உங்களுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். யார் ஒருவரும் காசி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கோயிலை புனரமைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பாராட்டுகள் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வாராணசியில் தேநீர் அருந்திக் கொண்டிருப்பது போலவும், காலை 9 மணிக்கு வாராணசி தெருவில் நடந்து செல்வது போன்றும் விடியோக்களையும் விஷால் பகிர்ந்திருந்தார்.

அவருடன், விஷாலின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான நந்தாவும் சென்றிருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT