செய்திகள்

ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' - சிவகார்த்திகேயனுக்கு பதிலாக களமிறங்கும் பிரபல ஹீரோ

DIN

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. துவக்கத்தில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுவருதவதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் சிவகார்த்திகேயனும் கதாநாயகியாக தமன்னாவும் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக ஜெய் நடிக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஜெய் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து வேட்டை மன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் முழுமையடையவில்லை. 

கூடுதல் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் தமன்னாவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT