முகப்பு
செய்திகள்

ஹிந்தி படத்தில் நடிக்கும் பேபி மானஸ்வி - மாமனிதன் மூலம் கிடைத்த வாய்ப்பு

மாமனிதன் படத்தில் நடித்த பேபி மானஸ்வி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

மாமனிதன் படத்தில் நடித்த பேபி மானஸ்வி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

நகைச்சுவை நடிகரான கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாராவின் மகளாக இமைக்கா நொடிகள் படத்தில் கலக்கினார் பேபி மானஸ்வி. 

தர்பார், மஹா, பரமபத விளையாட்டு, தி லெஜண்ட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக மானல்வி நடித்திருந்தார். 

இந்த நிலையில் இவர் ஹிந்தி படமொன்றில் நடிக்கிறாராம். இதனை இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். சீனு ராமசாமி ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், மாமனிதன் படம் தில்லி சர்வதேச திரைப்ப விழா திரையிடல் காரணமாக படத்தில் சிறப்பாக நடித்த பேபி மானஸ்விக்கு ஹிந்தி படத்தில் உடனே நடிக்க அழைப்பு வந்தது மகிழ்ச்சி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.