செய்திகள்

'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்த ரஜினிகாந்த் - பா.ரஞ்சித்திடம் என்ன சொன்னார் தெரியுமா?

DIN

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது படம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

பா.ரஞ்சித் முதன்முறையாக இசையமைப்பாளர் தென்மாவுடன் இணைந்து பணியாற்றினார். நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகிறது. ஒரு சிலர் இந்தப் படத்துக்கு அதீத பாராட்டு தெரிவித்துவரும் நிலையில் மற்றொரு சிலர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

பா.ரஞ்சித் படங்களுக்கு இப்படி கலவையான விமர்சனங்கள் வருவது  இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார். இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

அதில், ''நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் என்னிடம், இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை என இது உங்களது சிறந்த பணி என பாராட்டினார். உச்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன். நன்றி சார்'' என தெரிவித்துள்ளார். 

இயக்குநர்கள் சாம் ஆண்டன், குமரன், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜஸ்டின் பிரபாகரன், நடிகை காயத்ரி, நடிகர் ஷாந்தனு, தெலுங்கு இயக்குநர் நீரஜ் கெய்வான் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT