செய்திகள்

'வேட்டைக்கு தயாரா ?' - கமலின் பிக்பாஸ் ப்ரமோ விடியோ வெளியானது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் ப்ரமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் ப்ரமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

தெலுங்கு பிக்பாஸ் சமீபத்தில் துவங்கிய நிலையில் தமிழ் பிக்பாஸ் எப்பொழுது என ரசிகர்கள் கேள்விகள்  எழுப்பிய வண்ணம் இருந்தனர். குறிப்பாக இந்த சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களிடையே முதன்மையாக இருந்தது. 

காரணம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் பாதியில் வெளியேற சிம்பு தொகுத்து வழங்கினார். இதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் டிவி ப்ரமோவை வெளியிட்டுள்ளது. 

அதில் காடு போன்று வடிவமைக்கப்பட்ட அரங்கில் தோன்றும் கமல் தனக்கே உரிய பாணியில் வேட்டைக்கு தயாரா என்ற கேள்வி எழுப்புகிறார்.  கிட்டத்தட்ட விக்ரம் படத்தில் அவர் ஆரம்பிக்கலாங்களா என சொல்வது போல இருக்கிறது அவரது முகபாவனை.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருப்பதால்  பிக்பாஸ் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக  நடிகர் கார்த்திக் குமார், தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, நடிகை ஸ்ரீநிதி, தொகுப்பாளர் ரக்சன், பாடகி ராஜலெட்சுமி, நடிகை தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாத் போன்றவர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT