செய்திகள்

இயக்குநர் மணிரத்னம் குரலில் பேசி அசத்திய ஜெயராம்!

பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம்போல் நகைச்சுவையாக மிமிக்ரி செய்தார் நடிகர் ஜெயராம். 

DIN

பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம்போல் நகைச்சுவையாக மிமிக்ரி செய்தார் நடிகர் ஜெயராம். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

மேடையில் நடிகர்கள் பார்த்திபன் மற்றும் ஜெயராம் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர்.அப்போது, ஜெயராம்  படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகர் பிரபுவின் குரலில் பேசியதும்  அரங்கிலிருந்தவர்கள் பலமாக சிரிக்கத் துவங்கினர்.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம்போல் மிமிக்ரி செய்ததும் மீண்டும் அரங்கம் அதிரும் அளவிற்கு சிரிப்பொலிகள் எழுந்தன. 

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT