பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?: அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமிதாப் பச்சன், ரன்பிர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கிய படம் - பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா. மணிகண்டன் உள்பட ஐந்து பேர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். இணை தயாரிப்பாளர் - கரண் ஜோஹர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள 3-வது படம் இது. பிரம்மாஸ்திரம் படம் உலகம் முழுக்க 8,913 திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது. பிரம்மாஸ்திரா என்கிற பெயரில் ஹிந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிரம்மாஸ்திரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரம்மாஸ்திரம் படம் முதல் நாளன்று உலகெங்கும் அனைத்து மொழிகளிலும் ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.