முகப்பு
செய்திகள்

‘நானே வருவேன்’ டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்திகள்

‘நானே வருவேன்’ டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும்  'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது, இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வருகிற செப்.15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, படத்தின் முதல் பாடலான ‘வீரா சூரா’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →