செய்திகள்

ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் படம் எப்படி இருக்கப்போது தெரியுமா ?

மகேஷ் பாபுவுடன் இணையும் படம் குறித்த சுவாரசியத் தகவலை இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்துகொண்டுள்ளார். 

DIN

ராஜமௌலி இயக்கிய முதல் படமான 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் முதல் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக்காகியிருக்கின்றன. 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் தமிழில் அதே பெயரில் சிபி சத்யராஜ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. 

அவரது 'சிம்ஹாத்திரி' திரைப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் 'கஜேந்திரா' என்ற பெயரிலும், அவரது 'சத்ரபதி' திரைப்படம் தமிழில் குருவி என்ற பெயரிலும், விக்ரமார்குடு சிறுத்தை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றன. 'விக்ரமார்குடு' திரைப்படம் ஹிந்தியில் 'ரௌடி ரத்தோர்' என்ற பெயரிலும் ரீமேக்காகியிருக்கிறது. 

இப்படி தனது படங்களை இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களும் ரசிக்கும்படியாக கொடுத்துவந்திருக்கிறார்.  அவரது படங்களின் வெற்றிக்கு அவர்தான் காரணம் என்பதை திரையுலகினருக்கு அழுத்தமாக பதிய வைக்க நகைச்சுவை நடிகரான சுனிலை 'மரியாதை ராமண்ணா' என்ற படத்தில் ஹீரோவாக்கி வெற்றிபெற்றார். அந்தப் படம்தான் சந்தானம் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் வெளியானது. 

அது மட்டுமல்லாமல் ஈயை ஹீரோவாக வைத்து நான் ஈ என்ற பெயரில்  வெற்றிபெற்றார் ராஜமௌலி. எனது படங்களின் வெற்றிக்கு நாயகர்கள் தேவையில்லை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்தார். மேலும் மிகப் பெரிய பொருட் செலவில் ஃபேண்டஸி படமான மகதீரா படத்தை எடுத்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். 

இவையெல்லாம் ரூ.500 கோடி பொருட் செலவில் அவரது கனவுப்படமான பாகுபலி படத்தை உருவாக்குவதற்கு முன்னோட்டமாக அமைந்தன. தயாரிப்பாளர்கள் அவர் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கு காரணங்களாக அமைந்தன.

அவரது பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர்  படங்களை உலகமே கொண்டாடியதை நாம் அறிவோம். அந்த வரிசையில் மகேஷ் பாபுவுடன் இணையும் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படம் உலகம் முழுவதும் சுற்றும் நாயகனின் கதை என்று ராஜமௌலி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் அயன் படத்தை போன்று சாகசங்கள் நிறைந்த கதையாக இருக்கப்போகிறது என்பது அவர் அளித்த தகவல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT