செய்திகள்

'நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?': இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித் விடியோ

லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் உரையாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் உரையாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித்குமார் திரைத்துறை தவிர மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதல், சிறிய வகை ஹெலிகாப்டர் உருவாக்கம், வாகனப் பந்தயம் என பல செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. அதில் புதிதாக இணைந்துள்ளது பைக் பயணம். 

அவ்வப்போது தன்னுடைய வாகனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் வெளியாகி வருகிறது. சமீபத்தில் லடாக் பகுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப் படங்களை அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பைக் பயணத்தின் மத்தியில் சாலையோரம் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் உரையாடும் விடியோ வைரலாகி வருகிறது. 

தன்னை சந்திப்பதற்காக 3 நாள்களாக தேடி அலைந்த ரசிகர்களிடம் இயல்பாக “நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?” என பேசிய விடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியான நடிகர் அஜித்குமாரின் விடியோவால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT