செய்திகள்

ஹிந்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த துல்கர் சல்மான்! 

சீதா ராமம் திரைப்படம் வெற்றி பெற்றதற்காக ஹிந்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் துல்கர் சல்மான். 

DIN

சீதா ராமம் திரைப்படம் வெற்றி பெற்றதற்காக ஹிந்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் துல்கர் சல்மான். 

தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள நடிகர் துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்வப்ன சினிமா மற்றும் வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.சமீபத்தில் இந்தத் திரைப்படமானது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

படம் சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் பெருவாரியன மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஹிந்தியிலிம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இது குறித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் துல்கர் கூறியதாவது: 

ஹிந்தி திரையரங்குகளில் சீதா ராமம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பினை தந்ததற்கு ஹிந்தி ரசைகர்களுக்கு மனமாற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் அன்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்காக அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இது ஒரு அருமையான நிகழ்வு. திரும்பவும் படத்தின் குழுவினருடன்  இணைந்ததில் மகிழ்ச்சி. எப்போது எனது இதயம் நிரம்பும் சீதா அவர்களை (மிருணாள் தாக்கூர்) சந்தித்ததும், கேப்டன் ஹனு சார், எங்களது மேஸ்ட்ரோ விஷால், காட்பாதர் அஸ்வினி டுட் அவர்களை சந்த்தித்தும் மகிழ்ச்சி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT