செய்திகள்

ஒரே கேள்வியால் மணிரத்னமாக மாறிய இயக்குநர் கெளதம்

தெலுங்கு பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் தவறுதலாக கேட்ட கேள்விக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் தெரிவித்த பதில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

DIN

தெலுங்கு பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் தவறுதலாக கேட்ட கேள்விக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் தெரிவித்த பதில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இயக்குநர் கெளதம் வாசுதேவ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்தப் பேட்டியில் கெளதம் வாசுதேவ் இயக்கிய திரைப்படங்கள் குறித்த தொகுப்பாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்து வந்தார். 

அப்போது தொகுப்பாளர் தவறுதலாக செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் சிம்புவை இயக்கிய அனுபவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் இயக்கியதாக எண்ணி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு அவரும் கோபப்படாமல் நிதானமாக பதிலளித்தார். 

தொகுப்பாளரிடம் அவர், “செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த சாமி உள்ளிட்ட நடிகர்களை இயக்குவது கடினமாக இருந்தது. நான் மணிரத்னம் என்பதால் என்னுடைய திரைப்பட படப்பிடிப்புக்கு அனைவரும் சரியான நேரத்திற்கு வந்து விடுவர். இதுவே இயக்குநர் கெளதம் வாசுதேவ் படம் என்றால் நடிகர் சிம்பு காலை 7 மணிக்குதான் வருவார். இயக்குநர் மணிரத்னம் என்பதால் சரியான நேரத்திற்கு அனைவரும் வந்துவிடுவர். அந்தப் படத்தினை இயக்கியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என புன்னகையுடன் தெரிவித்தார். 

தொகுப்பாளர் தவறுதலாக எழுப்பிய கேள்விக்கு கோபமடையாமல் புன்னகையுடன் கிண்டலாக பதிலளித்த இயக்குநர் கெளதம் வாசுதேவ்வின் விடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT