மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தம்பி ராமையா
மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார்.
மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார்.
மனு நீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது மகன் உமாபதியை நாயகனாக வைத்து மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கினார்.
நகைச்சுவை நடிகராக வலம்வந்த தம்பி ராமையா மைனா படத்துக்காக தேசிய விருது பெற்றபின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் தற்போது தனது அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
Advertisement
இதையும் படிக்க | மம்மூட்டியுடன் இணைந்த 'விக்ரம்' ஏஜெண்ட் டீனா
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது.