செய்திகள்

பாபா மறுவெளியீடு: வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றியது பிரபல நிறுவனம்

DIN

சூப்பர் ஸ்டாரின் ‘பாபா’ திரைப்படத்திற்கான வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்பாவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தியுள்ளனர்.

பாபா படத்தின் புதிய டிரைலர் மீண்டும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்த நாளையொட்டி டிசம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வருகின்றது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காலை 4 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் முடிவடைந்துவிட்டது.

இதற்கிடையே, பாபா படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT