முகப்பு
செய்திகள்

”வீட்டில் வற்புறுத்துகிறார்கள்.. ஆனால்” திருமணம் குறித்து தமன்னா விளக்கம்

திருமணம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

Updated On : 8 டிசம்பர், 2022 at 1:20 PM
பகிர்:

திருமணம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

Advertisement

எல்லா நடிகைகளை போலவே, இவரையும் அடிக்கடி திருமண கிசுகிசுவில் ரசிகர்கள் சிக்க வைப்பது வழக்கம். அப்படி போலியான செய்திகள் பரவும் போதெல்லாம் அதை மறுத்து தமன்னா கருத்து தெரிவித்து வந்தார்.

தற்போது மீண்டும் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுகுறித்துப் பேசிய அவர்  “ நான் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு காலம் நீடித்திருப்பேன் என நினைத்ததில்லை. அதேநேரம் திருமண வயது வந்த உடன் திருமணத்தைப் பற்றி கேட்க துவங்குவார்கள். என் வீட்டிலும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், நான் அதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது, தொழிலதிபருடன் எனக்குத் திருமணம் என செய்தி பரப்புகிறார்கள். இது முழுக்க வதந்தி. அப்படி எதாவது நடந்தால் நானே அதைத் தெரிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.