முகப்பு
செய்திகள்

விக்ரம் - துருவ்வின் 'மகான்': சிம்ஹாவின் வேடம் என்ன தெரியுமா?

விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்துள்ள மகான் படத்தில் பாபி சிம்ஹாவின் வேடம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள படம் 'மகான்'. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவின் வேடம் குறித்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா  சத்யவான் என்ற வேடத்தில் நடித்துள்ளார். 

மேலும் இந்தப் படத்தில் சிம்ரன், சனந்த், முத்துகுமார், தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முதன்முறையாக விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.