முகப்பு
செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் 'புஷ்பா' பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்

வங்கதேச பிபிஎல் போட்டிகளில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் புஷ்பா பட ஸ்ரீ வள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜுன் போன்று நடனமாடும் கிரிக்கெட் வீரர்களின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

புஷ்பா பட பாடல்கள் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்டியா புஷ்பா அல்லு அர்ஜுன் போன்று நடனமாடும் விடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக வங்கதேச நாட்டில் நடைபெறும் பி.பி.எல் எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் என்ற போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது கோமில்லா விக்டேரியன்ஸ் மற்றும் ஃபார்ச்சுன் பரிசால் ஆகிய அணிகளுக்கு இடையோன போட்டிகள் நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது. 

போட்டியின் போது ஃபார்ச்சுன் பரிசால் அணியின் சார்பாக பங்கேற்ற டுவைன் பிராவோ 18வது ஓவரில் மெஹிதுல் இஸ்லாம் என்பவரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதனைக் கொண்டாடும் விதமாக புஷ்பா ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜுன் நடனமாடுவது போல பிராவோ நடனமாடினார். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.