முகப்பு
செய்திகள்

’பிசாசு 2’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு  வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்-1 ஆம் தேதி நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் 'பிசாசு 2' படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் தற்போது இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் - 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்  என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசாசு 2-ல் ஆண்ட்ரியாவுடன் நடிகை பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →