மீண்டும் தொடங்கியது சிம்புவின் ’பத்து தல’ படப்பிடிப்பு
நடிகர் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
நடிகர் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக் பத்து தல என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இதையும் படிக்க: ஏகே 61: அஜித்துடன் இணையும் சஞ்சய் தத்?
Advertisement
இந்நிலையில், முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் சிம்பு அமெரிக்கா சென்றார். தற்போது, சென்னை திரும்பியுள்ளதால் படக்குழுவினர் மீண்டும் ‘பத்து தல’ படப்பிடிப்பை மைசூரில் துவங்கியுள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.