நடிகையாகும் பாடகி ராஜலட்சுமி
பாடகி ராஜலட்சுமி விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
பாடகி ராஜலட்சுமி விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன மச்சான்’, ‘புஷ்பா’ படத்தில் ‘சாமி என் சாமி’ உள்பட பல பாடல்களை பாடியவர் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி செந்தில்.
இந்நிலையில், ராஜலட்சுமி ‘சைலன்ஸ்’ என்கிற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
Advertisement
கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் இப்படத்தை இயக்குகிறார்.
ராஜலட்சுமியின் கணவர் செந்தில் கணேஷ் கரிமுகன் என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.