கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை அமலா பால். கடந்த 2010-இல் தமிழ் திரைப்பட துறையில், "வீரசேகரன்' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "சிந்து சமவெளி', "மைனா', "தெய்வத் திருமகள்', "தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தனுஷ் உடன் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றி அடைந்தது.
தற்போது கதாநாயகியாக தனித்து நடித்து வருகின்றனர். ஆடை என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக தனித்து நடித்தார். பின்னர் பல்வேறு ஓடிடி இணையத் தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது படமான கடாவர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியானது.
தமிழில் வெளியாகி வெற்றி பெரும் பெற்ற கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தை அஜய்தேவ்கானே இயக்கி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அமலாபால் மலையாளத்தில் நடிக்கும் ‘தி டீச்சர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஹக்கிம் ஷாஜகான், செம்பன் வினோத், அனு மோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ விடிவி புரடொக்ஷன் தயாரிப்பில் விவேக் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். பகத்பாசிலின் அதிரன் படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாள்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் அமாலா பாலின் படம் இது என்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்போடு இருக்கிறார்கள்.
ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த இன்பப் பரிசு! வைரல் படங்கள்!!
முதன்முறையாக ஓடிடியில் களமிறங்கும் எஸ்.ஜே. சூர்யா!
நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்!
பூங்குழலியாக அசத்தும் தர்ஷா குப்தா: வைரலாகும் புகைப்படங்கள்!
இயல்பு நிலைமைக்கு திரும்பிய ராஷ்மிகா: அசத்தும் புதிய புகைப்படங்கள்!