முகப்பு
செய்திகள்

நாளை வெளியாகிறது பிரின்ஸ் படத்தின் டிரைலர் 

பிரின்ஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Updated On : 8 அக்டோபர், 2022 at 7:03 PM
பகிர்:

பிரின்ஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

Advertisement

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

டாக்டர், டான் என சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.