முகப்பு
செய்திகள்

விதார்த்தின் ‘ஆற்றல்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆற்றல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

செய்திகள்

விதார்த்தின் ‘ஆற்றல்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆற்றல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆற்றல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. ஹிப் ஹாப் ஆதி அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கடசியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான ‘பயணங்கள் கவனிக்கவும்’ படம் வெளியானது.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆற்றல் திரைப்படம் அக்.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை கே.எல். கண்ணன் இடக்கியுள்ளார். இதில் ஷ்ரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன் முதலானோர் நடித்துள்ளனர். செவ்வந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கார் வருகிறது. தொழிநுட்ப உதவியுடன் ஒரு கார் எப்படியெல்லாம் மனிதனுக்கு உதவ முடியும் என்பதை இந்த படம் பேசுமென இயக்குநர் கூறியிருந்தது குறிப்பிட்டத்தக்கது. 

படத்தின் டிரைலர்: 

முழு கட்டுரையைப் படிக்க →