முகப்பு
செய்திகள்

''பத்தவச்சு பறக்கவிட்டுடீங்க'' - பாராட்டிய நடிகர் சூர்யா

கார்த்தியின் சர்தார் டிரைலர் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

கார்த்தியின் சர்தார் டிரைலர் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். 

இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தற்போது கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள சர்தார் படத்தை இயக்கியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் வருகிற 21 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் ரித்விக் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சர்தார் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தனது பதிவில், ''மிகவும் ஈர்ப்புமிக்க டிரைலர். ஒரு வலுவான கதை தனக்காகத் தானே பேசிக்கொள்ளும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பத்தவச்சு பறக்கவிட்டுட்டீங்க'' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →